மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் .. அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்







மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் ..




1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்




2.தான் மட்டும் எழுந்தாள் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்




3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திட வேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்




4.முதலில் அனைத்து வீட்டு வேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்




5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்




6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப் படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொன்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்




7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டு விடுங்கள் இல்லை யெனில் நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களைப்போலவே செய்வார்கள்.




8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசை பாடுவதை தவிருங்கள்




9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பன மாதிரியே வந்திருக்கு "




10.எப்படி நீங்கள் சதா வீட்டு வேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்றீர்களோ,

உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்




11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்




12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யாரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலை கொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்




13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்




14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்




15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்




16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர். அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் ..காட்டுத்தனமாக கத்துவதால் எதும் சீராக போவதில்லை




👨🏻‍🌾: 17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏண்டா பெண்ணாய் பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர். எண்ணவும் கூடாது




18.என்ன பொழப்பு இஃது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது




19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கை கொள்ள செய்திடும்




20.தேவையில்லாமல் பீரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்




21.நறுக்கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்




22.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்




23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்




24.நைட்டி இதனை வேலை செய்திடும் போது மட்டுமேஅணியுங்கள். மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்




25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்




26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்




27.கணவருக்கு பிடித்த மாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்




28.குறிப்பாக உள்ளடைகள் மீது அதிக கவனத்துடனும். சுத்தத்திலும் முக்கிய கவனத்துடன் செயல் பட்டிடுங்கள்




29.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்




30.கணவருடன் தினம் தினம் குறைந்தது முப்பது நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்




31.உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடை அணிகலன்களை உங்கள் கணவருக்கு நீங்களே தேர்வு செய்திடுங்கள்




31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்க வேண்டாம்




32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்




33.கணவரின் தொழில் அல்லது வேலை செய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைதுகொள்ளுங்கள்




34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்




35.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதும் அதே நேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்




36.உங்கள் கணவரை ஜெயிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்




37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்க வேண்டாம். தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள். கொடுத்த பின் புலம்பவேண்டாம்




38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் அவர்களின் கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்




39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம்




40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள். வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்




41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக் கொடுத்து விடாதீர்




42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்




43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ண வேண்டாம் உழவர் சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே




44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்




45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்




46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்த மட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்




47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்ப்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக்கொள்ளவது நல்லது




48.தேவை இல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது. மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கல்




49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால் தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை என்பதை மறக்க வேண்டாம்




50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அஃது சந்தேக கண்ணாக மாறவேண்டாம்




51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அஃது எச்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே




52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்து கொள்ளுங்கள் அஃது தேவை இல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க்க உதவும்




53.கணவரின் வெளிநாட்டு பயணங்கள், கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்




54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்த்தி அவர் குடிக்க விரும்பினால் அஃது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்




55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது




56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள். ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்




57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண். ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்




: 58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்க வேண்டாம்




59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது பைபிள் வார்த்தை




60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்




61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒரு போதுமே மறக்கவேண்டாம்




62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்




63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள். சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்




64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்




65.மொத்தத்தில் நீங்கள் தாயாக தோழியாக மனைவியாக இருப்பதைவிட சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்




66.பயிற்சியாளருக்குப் பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும். வாழ்க்கை எளிமையாகும். இனிமையாகும்




67.அன்பு நிலை பெற ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.






"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

No comments:

Post a Comment

Celebrating Friendship Day 2025: Honouring the Bonds That Matter Most

Celebrating Friendship Day 2025: Honouring the Bonds That Matter Mos In a world that often feels chaotic and fast-paced, Friendship Day 20...