வாயை கொப்பளிக்காதீர்கள்! நேற்று மாலை திருமண வரவேற்பு ஒன்றில், கலந்து கொண்டு, விருந்தை முடித்துக் கொண்டு, கை கழுவதற்காக வாஷ்பேஷனுக்கு சென்றேன்.

 வாயை கொப்பளிக்காதீர்கள்!

நேற்று மாலை திருமண வரவேற்பு ஒன்றில்,  கலந்து கொண்டு, விருந்தை முடித்துக் கொண்டு, கை கழுவதற்காக வாஷ்பேஷனுக்கு சென்றேன்.



எனக்கு அருகில் இருந்த டாக்டர் நண்பர் ஒருவர், 

"ஸார் கையை மட்டும் கழுவுங்க. வாயை கொப்பளிக்காதீங்க" என்று சொன்னார்.


நான் குழப்பத்தோடு "ஏன்?" என்று கேட்டேன்.

அதற்கு அவர் "ஸார் பெரும்பாலான கல்யாண மண்டபங்களில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படாமே இருக்கலாம். பொதுவா கல்யாண மண்டபங்கள் தினசரி உபயோகத்தில் இருக்காது.

அதன் காரணமா தொட்டியில் தேங்கி நிக்கிற, தண்ணியில் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் பல்கி பெருகி இருக்கும். உடம்பில் 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கிறவங்க, அந்த தண்ணியில் வாயை கொப்பளிக்கும் போது அந்த வைரஸ்கள், பாக்டீரியாக்கள் தொண்டைக்குள்ளே போய் "த்ரோட் இன்ஃபெக்ஷன்"

(Throat Infection) ஏற்பட வாய்ப்பு அதிகம்."


" அப்படீன்னா வாய்

 கொப்பளிக்க என்ன பண்றது டாக்டர்?"


"கொப்பளிக்கணும்ன்னா  நாம் உட்கார்ந்து சாப்பிடும் போது குடிக்கிறதுக்காக, தண்ணீர் பாட்டிலை வைப்பாங்க இல்லையா ?அந்த பாட்டிலை கையோடு எடுத்துகிட்டு வந்துடணும். அந்த தண்ணியில் வாயை கொப்பளிக்கிறது நல்லது." என்று சொல்லிவிட்டு தன் கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை உபயோகித்து வாயை கொப்பளிக்க ஆரம்பித்தார்.


வாழ்க்கையில்

யாராவது ஒருவர்,

ஏதாவது ஒரு பாடத்தை, 

நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே ,இருக்கிறார்கள்.

தண்ணீரை வீணாக்காதீர்!

மழை நீரை சேமிப்போம்! 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்!


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

No comments:

Post a Comment

Celebrating Friendship Day 2025: Honouring the Bonds That Matter Most

Celebrating Friendship Day 2025: Honouring the Bonds That Matter Mos In a world that often feels chaotic and fast-paced, Friendship Day 20...